நயன்தாராவின் " அன்னபூரணி.. பார்த்தால் பசி தீரும்.. எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ப்ரோமோஷன்

Nayanthara

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிரெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படம் ‘அன்னபூரணி’. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சத்தியராஜ், கார்த்திக் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக பெண் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் அன்னபூரணி திரைப்படம் வரும்  28ஆம் தேதி மதியம் 1:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Nayanthara

மேலும் உணவை மையக்கதையாக கொண்ட 'அன்னபூரணி' ஒளிபரப்பின் போது 'பார்த்தால் பசி தீரும்' என்ற புது முயற்சியை ஜீ தமிழ் கையில் எடுத்துள்ளது. அதாவது இந்த படமானது ஒளிபரப்பும் நேரத்தில் டிவி ஸ்க்ரீனில் தோன்றும் மொபைல் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்து பார்வையாளர்கள் எங்களது முயற்சியில் ஒன்றிணையலாம் எனவும், நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு 10 தனிப்பட்ட அழைப்புகளுக்கும், உணவின்றி தவிக்கும் ஒரு குழந்தைக்கு ஜீ தமிழ் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் உணவை வழங்கி அவர்களின் பசி தீர்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story