அன்னபூரணி திரைப்படம் ஓடிடி தளத்தில் வௌியானது

அன்னபூரணி திரைப்படம் ஓடிடி தளத்தில் வௌியானது

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமாக வெளியான அன்னபூரணி படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்க, ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிரெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.   இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சத்தியராஜ், கார்த்திக் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அனால் அந்த சமயத்தில் மிக்ஜாம் புயல் தாக்கியதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவங்களில் படம் சரியா ஓடவில்லை. இதனால் வசூல் பாதித்தது.

அன்னபூரணி திரைப்படம் ஓடிடி தளத்தில் வௌியானது

 இந்நிலையில், அன்னபூரணி திரைப்படம் பிரபல நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. தற்போது தமிழில் மட்டும் வெளியாகியுள்ள அன்னபூரணி திரைப்படம் அடுத்து தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story