லோகேஷின் LCUவில் இணைந்த மற்றுமொரு இயக்குநர் – இருக்கு ஒரு தரமான சம்பவம் இருக்கு……

photo

இந்த ஆண்டு ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்கும் ஒரு படம் ‘தளபதி67’. ‘விக்ரம்’ படத்தின் தாக்கம் தான் இந்த உச்சகட்ட எதிர்பார்ப்பு என்று கூட சொல்லலாம். படம் குறித்த சில தகவல்கள், நடிகர்கள் தேர்வு ஆகியவை இணையத்தில் கசிந்தாலும் சமீபத்தில் தான் இந்த படத்தில் இயக்குநரான கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்ததை அறிவித்தார். அந்த வரிசையில் மற்றுமொரு இயக்குநரும், நடிகருமான மனோபாலா ‘தளபதி 67’ல் தானும் இருப்பதை ட்வீட் மூலமாக தெரியப்படுத்தியுள்ளார்.

photo

அந்த வகையில் அவர் கூறியுள்ளதாவது:  “ தளபதி 67 சூட்டிங் இன்று தொடங்கியுள்ளது. லோகேஷ் மற்றும் எங்கள் தளபதியை சந்தித்தேன், அதே ஆற்றல் அதே வேகம்…முதல் நாளே தூள்…” என பதிவிட்டுள்ளார். இதன் மூலமாக மனோபாலாவும் இந்த படத்தில் உள்ளார் என்பது தொன்னூற்று ஒன்பது புள்ளி ஒன்பது சதவீதம் உறுதியாகிவிட்டது.

photo


 

 

Share this story