'Sawadeeka' பாடலை பாடிய அந்தோணி தாசன் பதிவிட்ட க்யூட் வீடியோ
நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பொங்கல் பண்டிகை அன்று இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான சவதீகா பாடல் நேற்று வெளியானது. அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில் தெருக்குரல் அறிவு எழுதிய இந்த பாடலை அந்தோணி தாசன் பாடியுள்ளார்.
Pure vibe material! 🕺💃 #Sawadeeka ❤️ hits 1️⃣ Million views on YouTube. Keep tripping! ⚡
— Lyca Productions (@LycaProductions) December 27, 2024
🔗 https://t.co/idNfmq5S50
An @anirudhofficial musical 🎹
Sung by @anthonydaasan 🎙️
Written by @Arivubeing ✍🏻
Choreography by @kayoas13 🕺#Vidaamuyarchi #EffortsNeverFail#AjithKumar… pic.twitter.com/vcHf1mXGt2
இந்நிலையில், அந்தோணி தாசன் தனது மனைவியை தூக்கி செல்லமாக விளையாடும் வீடியோவை சவதீகா பாடலுடன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், சவதீகா பாடலுக்காக இசையமைப்பாளர் அனிருத் மற்றும் விடாமுயற்சி படக்குழுவினருக்கு நன்றி" என்று அவர் தெரிவித்துள்ளார்.
#Sawadeeka singer Anthony Dasan vibing with his wife for Sawadeeka. ❤️
— Ajith Fans Trends (@AjithFansTrendX) December 27, 2024
Going to be a viral couple song 💯#VidaaMuyarchi pic.twitter.com/jYUnrsAYzg