ஆஸ்கர் ரேஸில் உள்ள அனுஜா குறும்படத்தின் டிரெய்லர் வெளியீடு

ஆஸ்கர்ஸ் விருதுகள் 2025-ல் சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்பட பிரிவில் பரிந்துரைப் பட்டியலில் இந்தியா சார்பில் "அனுஜா" இடம்பெற்றுள்ளது.
இந்த குறும்படத்தின் வெளியீட்டு தேதியை பிரபல ஓ.டி.டி. தளமான நெட்ஃப்ளிக்ஸ் தற்போது அறிவித்து இருக்கிறது. அதன்படி 2025 ஆஸ்கர்ஸ் பரிந்துரை பட்டியலில் உள்ள "அனுஜா" குறும்படம் வருகிற பிப்ரவரி 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்த அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் அதன் இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், "அனுஜா என்பது விரைந்து மீள்தன்மை, சகோதரத்துவம் மற்றும் நம்பிக்கையின் கதை. அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட லைவ் ஆக்ஷன் குறும்படம் பிப்ரவரி 5-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வருகிறது," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதோடு குறும்படத்தின் டிரெய்லரும் வெளியாகி இருக்கிறது.