அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரிக்கும் Bad Girl பட டீசர் வெளியானது

bad girl

அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், 'TeeJay' அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான Bad Girl படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.


டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் மற்றும் அனுராக் கேஷ்யப், நடிகர்களான அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், படத்தின் எடிட்டரான ராதா ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி S தானு, இயக்குனர் மிஷ்கின், நடிகை டாப்ஸி பண்ணு ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த Bad Girl படத்தின் டீசரை பார்த்தபின் விருந்தினர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

vetrimaran
தயாரிப்பாளராக வெற்றிமாறன் இந்த படத்தைப் பற்றி பேசும் பொழுது, கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியில் வரும் கதைகளில்,எந்தக் கதை வித்தியாசமாக தெரிந்தாலும், அனுராக் கேஷ்யப்பிடம் பகிர்ந்து கொள்வது வழக்கம். அப்படி இந்த கதையை பகிர்ந்து கொள்ளும் போதே  நாங்கள் இருவரும் சேர்ந்து பண்ணும் ஐடியா இருந்தது. வேறு சில காரணங்களுக்காக தள்ளிப் போனது. ஆனால் விடுதலை 2 பட சூட்டிங்கின் போது, இந்தப் படத்தின் முதல் பாதியை பார்த்த அனுராக், படத்தை மிகவும் பாராட்டி நானே இந்தப் படத்தை தயாரிக்கிறேன் என்று கூறினார். ஆக அனுராக் கேஷ்யப் தயாரிக்கும் முதல் தமிழ் படம் இதுதான். மேலும் அனுராக் கேஷ்யப் இந்தப் படத்தின் இசைக்காக அமித் திருவேதியை நானே தொடர்பு கொண்டு பேசுகிறேன் என்று கூறி, அமித் திரிவேதியை இந்த படத்தின் இசைக்கு கொண்டு வந்தார். ஆக  அமித் திரிவேதிக்கும் இதுதான் முதல் படம். மேலும் ரோட்டர் டாம்  திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதில் முக்கிய பிரிவான Tiger Competetion பிரிவில், முதல் பெண் இயக்குனரான வர்ஷா பரத்தின் Bad Girl படமும் இடம்பெற்று இருப்பது, தனிச்சிறப்பு . இப்படி பல 'முதல்'  விஷயங்கள் இருப்பதால் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இந்த நிகழ்வை பெரிதாக நடத்துகிறது என்று கூறினார். 

இந்தக் கதை எனக்கு முன்பே தெரிந்தாலும் கூட, கடைசியாக தான் இந்தப் படத்தில் இணைந்தோம். இந்தப் படத்தின் சூட்டிங்கிக்கு நான் எப்பொழுதாவது செல்லும் பொழுது, முதல்முறையாக  சாந்தி பிரியா மேடமை சந்தித்தேன். அப்பொழுது அவர், " சார். இந்த படம்  எல்லா Festvel லையும் ஹிட் அடிக்கும் சார். நேஷனல் அவார்டு கூட கிடைக்கும் சார்" என்று கூறினார். அப்பொழுது நான் வர்ஷாவிடம், " இந்தப் படத்தை உன்ன விட, உன் படத்துல நடிக்கிறவங்க ரொம்ப அதிகமா நம்புறாங்க. அதனால இந்த படத்தை நல்லா எடுத்துடுமா? என்று கூறினேன்.  வர்ஷாவும் எனக்கு கொடுத்த கமிட்மெண்டை விட  100% அதிகமாகவே கொடுத்துள்ளார். மேலும் இந்தப் படம்  Gross Root Film Company ய பெருமைப்பட வைக்கும் என கூறினார். 

Share this story