அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம்..!

அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றி மாறன் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாக போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இந்தி இயக்குனர் மற்றும் நடிகராவார் அனுராக் காஷ்யப். இவர் சமீபத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும் மலையாள திரைப்படமான ரைஃபில் கிளப் திரைப்படத்தில் நடித்து இருந்தார். மும்பையில் வசிக்கும் அனுராக் இந்தாண்டு தென் இந்தியாவிற்கு குடியேற போவதாக கடந்த மாதம் தெரிவித்து இருந்தார்.
Something exciting is loading…stay tuned! ⏳ pic.twitter.com/7OU7kk3Dmh
— taapsee pannu (@taapsee) January 25, 2025
தற்பொழுது வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தை அனுராக் இயக்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் அறிவிப்பை நாளை வெளியிடப்போவதாக ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர். இதனை நடிகை டாப்ஸி அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றி மாறனின் திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருக்கும்.இந்த இருவரும் இணையும் போது எம்மாதிரியான கதைக்களத்தை உருவாக்கியுள்ளனர் என எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.