பாலிவுட்டில் இருந்து விலகினார் இயக்குனர் அனுராக் காஷ்யப்...!

anurag kashyap

பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் ஹிந்தி சினிமாவிலிருந்து விலகியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தி திரையுலகில் பல்வேறு வித்தியாசமான கதைக்களங்களை இயக்கி, அதில் வெற்றியும் கண்டவர் அனுராக் கஷ்யப். இவர் இயக்கத்தில் வெளிவந்த 'கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்', 'ராமன் ராகவ்', 'பிளாக் ஃப்ரைடே' ஆகிய படங்கள் விமர்சகர்களால் பாராட்டுக்களைப் பெற்றன. தற்போது பல்வேறு படங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். தொடர்ந்து பாலிவுட் திரையுலக  செயல்பாட்டு முறை குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார் அனுராக் கஷ்யப்.  anurag

மேலும் அண்மையில், மும்பையில் இருந்து வெளியேற முடிவெடுத்திருப்பதாகவும், தென்னிந்திய சினிமாவில் தொடர்ச்சியாக படங்களில் நடிக்க விரும்புவதாகவும் அனுராக் காஷ்யப் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.   இந்த நிலையில், பாலிவுட் சினிமா மற்றும் மும்பையிலிருந்து விலகுவதாக அனுராக் காஷ்யப் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது, அவர் பெங்களூருவில் வாடகை வீட்டில் குடியேறியுள்ளாகவும் கூறப்படுகிறது.

Share this story