ராஜு முருகன் இயக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடும் அனுராக் காஷ்யப்..!

raju murugan

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவராவார் ராஜு முருகன். இவர் இயக்கிய குக்கூ, ஜோக்கர், மெஹந்தி சர்கஸ், ஜிப்ஸி ஆகிய திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது. இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது ஜப்பான் திரைப்படம் . ஆனால் இப்படம் மக்களிடையே எதிர்ப்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.sasikumar

இந்நிலையில் ராஜுமுருகன் அடுத்ததாக நடிகர் சசிக்குமார் நடிப்பில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ஒலிம்பியா மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நாளை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை காலை 11மணிக்கும் வெளியிடவுள்ளது. இப்போஸ்டரை பாலிவுட இயக்குனர் மற்றும் நடிகரான அனுராக் காஷ்யப் வெளியிடவுள்ளார்.

Share this story