"ஆறாம் வகுப்பு படிக்கும் போதே என்னை ஒருவர் காதலித்தார்" -இப்படி சொன்ன நடிகை யார் தெரியுமா?
1752370248000
நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நடித்துவருகிறார். இவர் நடித்த சில திரைப்படங்கள் மலையாளத்திலும், இந்தியிலும் மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டுள்ளது.
2005-ல் இவர் நடித்த முதல் திரைப்படம் - நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் எனும் தெலுங்குத் திரைப்படமாகும். 2006-ல், ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். கடந்த பத்து வருடங்களில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
துவக்கத்தில் ஒரு சராசரி கவர்ச்சி நாயகியாக அறியப்பட்ட இவர், அருந்ததி திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புத் திறனை நன்கு வெளிப்படுத்தினார். பின்னர் பாகுபலி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை அடைந்ததுடன், அனுஷ்காவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது.
அதன் பின், இவரது திரை வாழ்க்கை முற்றிலும் மாறியது. மாறுபட்ட கதை அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அனுஷ்காவின் பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் அனுஷ்கா தனக்கு வந்த காதல் பிரபோசல் குறித்து பேசியிருக்கிறார். ‘‘நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, என் வகுப்பில் இருந்து ஒரு பையன் என்னிடம் வந்து, ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்றான். அவன் என்னை உயிருக்கு உயிராக நேசிப்பதாகச் சொன்னான். அந்த நேரத்தில், ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்றால் என்னவென்று கூட எனக்குத் தெரியவில்லை. ஆனால், ‘சரி’ என ஏற்றுக் கொண்டேன். காதல் என்னவென்றே புரியாத வயதில் நடந்து அது என் வாழ்க்கையில் ஒரு இனிமையான நினைவாகவே இன்றும் உள்ளது’’ என்று அனுஷ்கா கூறினார். இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.