அனுஷ்கா- விக்ரம் பிரபு நடித்துள்ள 'காட்டி' படத்தின் ரிலீசில் மாற்றம்..?

ghaati

அனுஷ்கா- விக்ரம் பிரபு நடித்துள்ள 'காட்டி' திரைப்படத்தின் ரிலீசில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'காட்டி'. படத்தை பான் இந்தியா படமாக தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 18ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

anushka

இயக்குனர் கிரிஷ், அனுஷ்கா கூட்டணி 'வேதம்' படத்திற்குப் பிறகு மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தின் மூலம் விக்ரம் பிரபு நேரடி தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்கிறார். ghaati

இப்படம் பற்றிய கடைசி அப்டேட் ஜனவரி மாதம் வெளியானது. அதன்பின் வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் படம் பற்றிய எந்தத் தகவலும் வராமல் இருப்பதால் படத்தின் ரிலீஸில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. 

Share this story