அனுஷ்கா நடிப்பில் உருவான காதி திரைப்படத்தின் டிரைலர் தேதி அறிவிப்பு!
1754440232000
இயக்குநர் கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கத்தில் நடிகை அனுஷ்கா ‘காதி’ (ghaati) என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம்பெற்றிருந்ததைத் தொடர்ந்து இப்படம் ஜூலை 11 ஆம் தேதி பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தனர். ஆனால், படத்தின் பணிகள் முழுமையாக முடிவடையாததால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை இன்று (ஆக.6) வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

