அனுஷ்காவின் Ghaati படத்தின் ரிலீஸ் அப்டேட்...!
1745930321764
அனுஷ்கா நடித்துள்க்க Ghaati படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் காட்டி. முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபுவும் நடித்துள்ளார். கஞ்சா கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரத்தம் வழிந்த நிலையில் அனுஷ்கா சுருட்டு பிடிப்பது போன்ற தோற்றம் வெளியானதிலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியது.

ஏப்ரல் 18ம் தேதி படத்தை வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் பின்னர் அந்த தேதியை மே மாதத்திற்கு தள்ளி வைத்தார்கள். ஆனால் இப்போது காட்டி படத்தை ஜூன் மாதம் இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

