அனுஷ்காவின் ‘காட்டி’ பட ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

அனுஷ்காவின் ‘காட்டி’ திரைப்படம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது!
பாகுபலி படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள அனுஷ்கா, Miss ஷெட்டி MR பொலிஷெட்டி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக காட்டி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தில் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோக்களை படக்குழு கடந்த ஆண்டே வெளியிட்டது. கிளிம்ப்ஸ் வீடியோவுக்கு ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. இந்தப்படம் மூலம் விக்ரம் பிரபு நேரடியான தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘காட்டி’ திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. மேலும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் போஸ்டர்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் பட ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு, காட்டி படம் ஜூலை 11 ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தது. இந்நிலை தற்போது மீண்டும் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாகவும், புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.