பச்சை நிறத்தில் ஜொலிக்கும் அபர்ணா பாலமுரளி... வைரல் புகைப்படங்கள் !

aparna balamurali

நடிகை அபர்ணா பாலமுரளியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

 aparna balamurali

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருந்த அபர்ணா பாலமுரளி, தமிழில் ஜிவியின் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன்படி ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவான சர்வம் தாளமயம் படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் அபர்ணாவுக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. ஏனென்றால் இந்த படங்களின் மூலம் ரசிகர்களை அபர்ணா கவரவில்லை. 

aparna balamurali

இதையடுத்து சூர்யாவின் நடிப்பில் உருவான சூரரைப்போற்று படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இந்த படத்தில் அபர்ணாவின் பொம்மி கதாபாத்திரம் சூர்யாவை மிஞ்சும் அளவுக்கு இருந்தது. கம்பீரமான பெண்ணாக நடித்திருந்த அபர்ணா,‌ தேசிய விருதையும் பெற்றார். 

aparna balamurali

இதையடுத்து தற்போது புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்நிலையில் பச்சை நிற உடையில் அசத்தும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்களை ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர். 

aparna balamurali

Share this story