அபர்ணாவிடம் அத்துமீறிய மாணவர்.. சஸ்பெண்ட் செய்த சட்டக்கல்லூரி பணியாளர் கவுன்சில் !

aparna balamurali

நடிகை அபர்ணாவிடம் அத்துமீறிய மாணவரை சஸ்பெண்ட் செய்து சட்டக்கல்லூரி பணியாளர் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.  

 மலையாள நடிகையான அபர்ணா, தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது மலையாளத்தில் ‘தங்கம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். சஹீத் அராபாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஜனவரி 26-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

aparna balamurali

இதற்கான கேரளாவில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று நடிகை அபர்ணா பாலமுரளி கலந்துக்கொண்டார். அப்போது மேடையில் பேசிக்கொண்டிருந்த அபர்ணாவிடம் புகைப்படம் எடுக்க கல்லூரி மாணவர் ஒருவர் வந்தார். அந்த நேரத்தில் எதிர்பார்க்காத விதமாக அந்த மாணவர் அபர்ணா தோள் மீது கையை போட்டார். அதை விரும்பாத அபர்ணா, மாணவரிடம் விலகி மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்தார். அபர்ணாவிடம் மாணவர் தவறாக நடந்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலானது. 

aparna balamurali

இந்த சம்பவம் தொடர்பாக நடிகை அபர்ணாவிடம் அந்த மாணவரும், கல்லூரி நிர்வாகமும் மன்னிப்பு கோரியது. அதேபோன்று உரிய விளக்கம் அளிக்கும்படி மாணவருக்கு கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இந்நிலையில் அத்துமீறிய மாணவர் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சட்டக்கல்லூரி பணியாளர் கவுன்சில் தெரிவித்துள்ளது. 

 

Share this story