அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்ஷனில் முதல் படம்.. இயக்குனர் பாக்யராஜ் தொடங்கி வைத்த ‘சண்டே’

sunday

சயின்ஸ் பிக்ஷனில் உருவாகும் ‘சண்டே’ படத்தை இயக்குனர் பாக்யராஜ் தொடங்கி வைத்தார். 

உலக அளவில் சயின்ஸ் பிக்ஷன் படங்களுக்கு எப்போது வரவேற்பு இருந்து வருகிறது. அந்த கலாச்சாரம் தற்போது தமிழ் சினிமாவில் அதிகமாக பரவி வருகிறது. அந்த வகையில் புதிய கதைக்களங்களில் சயின்ஸ் பிக்ஷன் திரைப்படங்கள் உருவாகி வெளியாகி வருகிறது. 

sunday

தற்போது அந்த வகையிலான புதிய படமாக உருவாகிறது ‘சண்டே’. இது இந்தியாவில் முதல்முறையாக தமிழில் உருவாகும் அபோகலிட்டிக் சயின்ஸ் பிக்ஷன் திரைப்படமாகும். இந்த படத்தை சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்குகின்றனர். எவாலுவேஷன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் ப்ளூபெர்ரி ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளனர். 

sunday

இந்த படத்தில் ஆதித்யா டிவி புகழ் விக்னேஷ் ராமமூர்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா மற்றும் மித்ரா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இவர்களுடன் கஜராஜ், வின்சென்ட் அசோகன், தர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்த படப்பிடிப்பை இயக்குனர் பாக்யராஜ் தொடங்கி வைத்தார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஊட்டியில் தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் புதிய அப்டேட்டுகள் விரைவில் வெளியாகவுள்ளது. 

 

Share this story