"விருதுகள் வாங்குவது என்பது மிகப்பெரிய சந்தோஷம்"-அப்புக்குட்டி

Comedian Appu Kutty’s request on the release of ‘Onbathu Kuli Sampath’

காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த அப்புக்குட்டி, சுசீந்திரன் இயக்கிய ‘அழகர்சாமியின் குதிரை’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். இப்படத்துக்காக, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அவருக்கு கிடைத்தது. இதையடுத்து பல்வேறு படங்களில் அவர் ஹீரோவாக நடித்தார். அதில் சில படங்கள் வெற்றிபெறவில்லை. சில படங்கள் திரைக்கு வராமல் இருக்கிறது. இதுகுறித்து அப்புக்குட்டி கூறுகையில், ‘நான் ‘அழகர்சாமியின் குதிரை’ என்ற படத்துக்கு பிறகு காமெடி வேடத்தில் நடிப்பதா, ஹீரோவாக நடிப்பதா என்ற கடுமையான குழப்பம் ஏற்பட்டது. என்னால் ஒரு உறுதியான முடிவு எடுக்க முடியவில்லை.

எனவே, என்னை தேடி வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதுதான் சரி என்று முடிவு செய்து, அதன்படியே சின்ன சின்ன வேடங்களில் தெடர்ந்து நடித்தேன். தேசிய விருது கிடைத்ததால், தொடர்ந்து விருது கதைகளாகவே என்னை தேடி வருகிறது. ‘வாழ்க விவசாயி’, ‘ஜீவகாருண்யம்’, ‘ஆ.கன்னியப்பன்’, ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ போன்ற படங்களில் அதுபோன்ற கதைகள் அமைந்தது. விருதுகள் வாங்குவது என்பது மிகப்பெரிய சந்தோஷம் என்றாலும், அதைவிட காமெடி ஹீரோவாகவே புகழ்பெற விரும்புகிறேன். அப்படி யாரும் என்னை சரியாக பயன்படுத்தவில்லையே என்ற ஆதங்கம் இருக்கிறது. சுசீந்திரன் மாதிரி எனது நடிப்பை முழுமையாக வெளிக்கொண்டு வருவதற்கு ஒரு இயக்குனர் வருவார் என்று காத்திருக்கிறேன்’ என்றார்.

Share this story