ஏ.ஆர்.ரகுமான் தங்கை இசையமைத்துள்ள தேசபக்தி பாடல்... குடியரசு தினத்தையொட்டி வெளியீடு !

Ishrath Qadri

 ஏ ஆர் ரகுமானின் தங்கை இஷரத் காதரி இசையில் உருவாகியுள்ள தேச பக்தி பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தியாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் ஏ ஆர் ரகுமான். ஏராளமான பாடல்களுக்கு இசையமைத்துள்ள அவரின் இசைக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது. அப்படிப்பட்டவரின் இசை குடும்பத்தில் இருந்து மற்றொரு இசையமைப்பாளர் உருவாகியுள்ளார். அதாவது ஏ.ஆர்.ரகுமானின் தங்கையான இஷ்ரத் காதிரி தான் அந்த புதிய இசையமைப்பாளர். 

Ishrath Qadri

பன்முக திறமை கொண்ட இஷ்ரத் காதரி, ஏற்கனவே தனது அண்ணன் ஏ ஆர் ரகுமான் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். இது தவிர்த்து புதிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அவரது இசையில் வெளியாகும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது சுயாதீன தேசபக்தி பாடல் ஒன்றிற்கு இஷ்ரத் காதரி இசையமைத்துள்ளார். 

Ishrath Qadri

'எந்தையும் தாயும்' என தொடங்கும் அந்தப் பாடல் குடியரசு தினத்தையொட்டி வெளியிடப்பட்டுள்ளது. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி என்று தொடங்கும் நமது மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப நாட்டின் பெருமைகளை அழகாக படம் பிடித்து வந்தே மாதரம் என முழக்கத்துடன் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்தப் பாடலை திரைப்பட இயக்குனர் மாதேஷ் இயக்கியுள்ளார். நாட்டின் பல பகுதிகளில் உள்ள அழகான காட்சிகளை ஒளிப்பதிவாளர் குருதேவ் படமாக்கியுள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். சக்சஸ் 11 நிறுவனம் இந்த பாடலை தயாரித்துள்ளது. 

Share this story