சிவகார்த்திகேயன் நடிக்கும் 23-வது படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
1695625668081
நடிகர் சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ், மாவீரன் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான மாவீரன் திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் அள்ளியது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 23-வது திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், அவருடன் புதிய படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

