"நான் அனைத்து மதங்களின் ரசிகன்"-இப்படி சொல்லும் இசையமைப்பாளர் யார் தெரியுமா ?

Income tax department issues notice to A.R.Rahman of routing income to his foundation
இசை அமைப்பாளரும், பாடகருமான ஏ.ஆர்.ரஹ்மான், தொடர்ந்து ஆன்மீகம் சார்ந்தும், சூஃபியிசம் சார்ந்தும் இயங்கும் பயணம் குறித்து பேசி வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு: நான் அனைத்து மதங்களின் ரசிகன். இஸ்லாம், இந்து மதம் மற்றும் கிறிஸ்தவத்தை படித்திருக்கிறேன். மதத்தின் பெயரால் மற்றவர்களை கொல்வது அல்லது தீங்கு செய்வதுதான் இங்கிருக்கும் எனது ஒரே பிரச்னை. மேடையில் நிகழ்ச்சி நடத்துவது, பெரும்பாலும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகளை சார்ந்த மக்கள் ஒன்றுகூடும் புனித இடத்திற்குள் நுழைவதை போல் உணர்கிறேன். நாம் அனைவரும் ஒற்றுமையின் பலன்களை அங்கு அனுபவிக்கிறோம். வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள், வெவ்வேறு மொழிகளை பேசுபவர்கள் அங்கு ஒன்றுகூடுகிறார்கள்.
சூஃபித்துவம் என்பது இறப்பதற்கு முன்பு இறப்பது போன்றது. உங்களின் சுயத்தை மறைக்கும் பல திரைகள் உங்களுக்குள் இருக்கும். அந்த திரைகளை அகற்ற, நீங்கள் அழிந்து போக வேண்டும். காமம், பேராசை, பொறாமை, முன்முடிவு என்று அனைத்தும் இறக்க வேண்டும். உங்கள் ஈகோ போய்விட்டால், நீங்கள் கடவுளை போல் வெளிப்படையானவராக மாறுகிறீர்கள். மத பின்னணியை பொருட்படுத்தாமல், ஒவ்வொருவரின் நம்பிக்கையின் நேர்மை எனக்கு பிடிக்கும். நாம் வெவ்வேறு மதங்களை பின்பற்றலாம். ஆனால், நம்பிக்கையின் நேர்மையே இங்கு அளவிடப்படுகிறது. அதுதான் நம்மை நல்ல காரியங்களை செய்ய வைக்கிறது. அதனால் மனிதநேயம் பயனடைகிறது. நாம் அனைவரும் ஆன்மீக ரீதியாக பணக்காரர்களாக இருக்க வேண்டும். ஆன்மீக செல்வம் வரும்போது, பொருள் செல்வம் பின்தொடர்கிறது.

Share this story