நாகூரில் ஏ ஆர் ரஹ்மான் கலைகட்டிய கந்தூரி – வைரல் வீடியோ.

photo

நாகூரில் கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய கந்தூரி விழாவில் இன்று தாபூத்து என்னும் சந்தனம் பூசும் வைபவம் அதிகாலை நாகூர் ஆண்டவர் சமாதியில் நடைபெற்றது.  466ஆம் ஆண்டு நடைபெறும் இந்த விழாவிற்கு பல்வேறு மாவட்ட, மாநிலத்தை சேர்ந்த மக்கள் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் இசைபுயல் ஏ ஆர் ரஹ்மான இன்று நாகூரிற்கு சென்று விழாவில் கலந்துகொண்டுள்ளார்.

photo

தர்கா நிர்வாகம் சார்பில் ஏ ஆர் ரஹ்மானிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்கான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

photo

அந்நிகழ்வில் ஸ்தூபி இசையுடன் கோலாட்டம், பறையாட்டம், நையாண்டி மேளம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற்றன. இதில் கலந்துகொள்வதற்காக இசையமைப்பாளர் .ஆர்.ரகுமான் ஆட்டோவில் வந்து இறங்கினார். பலத்த பாதுகாப்புடன் தர்காவுக்கு சென்ற இசையமைப்பாளர் .ஆர்.ரகுமான், அங்கு சந்தனம் பூசும் நிகழ்வில் கலந்துகொண்டு பின்னர் அங்கிருந்து கிளம்பினார்.

Share this story