ஏ.ஆர்.ரஹ்மான் என் தந்தையைப் போன்றவர்- மோஹினி டே விளக்கம்
29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு மனைவி சாய்ரா பானுவைப் பிரிந்ததாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் இன்னும் பெரும் வருத்தத்தில் உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் அவரது இசைக்குழு கிட்டார் கலைஞரான மோகினி டேக்கும் இடையே உள்ள உறவைப் பற்றி இணையத்தில் வதந்திகள் பரவின. காரணம், அடுத்த நாளே கணவர் மோஹினி டே மார்க் ஹார்ட்சை விவாகரத்து செய்வதாக அறிவித்தது தான்.
தற்போது,மோகினி இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்றை வெளியிட்டு தங்களது உறவு குறித்து வதந்திகளை பரப்பிய ட்ரோல்களுக்கு விளக்கமளித்துள்ளார்.மோகினி டே இன்ஸ்டாகிராம் வீடியோவில் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது தந்தையைப் போன்றவர். என் வயதில் அவருக்கு என்னைப்போன்ற ஒரு மகள் இருக்கிறார். அவருடன் எட்டரை வருடங்கள் கிதார் கலைஞராக பணியாற்றியது எனது வாழ்க்கையை பெரிதும் உயர்த்தியது. நாங்கள் ஒருவருக்கொருவர் மரியாதையும் அன்பும் கொண்டவர்கள். எனது விவாகரத்து தனிப்பட்டது. அதனை விமர்சிப்பது வேதனையானது. எனது தனியுரிமையை மதிக்க வேண்டும்’’என மோஹினி டே கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர், ‘குழந்தை பருவத்தில், இருந்து நான் ரஹ்மானுடன் 8.5 ஆண்டுகள் அவரது படங்கள், சுற்றுப்பயணங்கள் போன்றவற்றில் பணியாற்றியுள்ளேன், அவரை நான் மதிக்கிறேன். இதுபோன்ற உணர்ச்சிகரமான விஷயங்களில் மக்களுக்கு மரியாதையோ, பச்சாதாபமோ, அனுதாபமோ இல்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. மக்களின் மனதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ஜாம்பவான். அவர் எனக்கு அப்பா போன்றவர். எனது வாழ்க்கையிலும், வளர்ப்பிலும் முக்கியப் பங்காற்றிய பல முன்னுதாரணங்களும், தந்தையர்களும் என் வாழ்க்கையில் உள்ளனர்.
நான் யாருக்கும் எந்த விளக்கமும் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் அதே நேரத்தில் அது என் நிலைமையை கெடுக்க விரும்பவில்லை. எனவே தயவு செய்து தவறான தகவல்களை நிறுத்துங்கள். எங்கள் தனியுரிமையை மதியுங்கள்’’ என்று கூறியுள்ளார்.