இசை மழையில் நனைந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... ‘லால் சலாம்’ கம்போசிங் வீடியோவை பகிர்ந்த இசைப்புயல் !

lalsalaam

‘லால் சலாம்’ படத்திற்காக இயக்குனர் ஐஸ்வர்யாவுடன் இசையமைக்கும் வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, இளம் இயக்குனராக தமிழ் சினிமாவில் உள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு கௌதம் கார்த்திக்கை வைத்து ‘வை ராஜா வை’ படத்தை இயக்கினார். இந்த படம் போதிய வெற்றியை பெறவில்லை. 

lalsalaam

 இதையடுத்து சில ஆவணப்படங்களை இயக்கி வந்த ஐஸ்வர்யா, ‘ஓ சாத்தி சால்’ என்ற பாலிவுட் படம் ஒன்றையும் இயக்கி இந்தியிலும் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழில் புதிய படம் ஒன்றை அவர் இயக்குகிறார். ‘லால் சலாம்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படம் விளையாட்டை மையமாக வைத்து உருவாகிறது.  

lalsalaam

இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும், விக்ராந்த் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்திற்கு தற்போது ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இது குறித்த வீடியோ ஒன்றை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். அதில் ஹார்மோனிய பெட்டியை ஏ.ஆர்.ரகுமான் வாசிக்கும் போது அதை மெய் மறந்து ஐஸ்வர்யா ரசிக்கும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  


 

 

Share this story