காதலுக்கு மரியாதை... பிரபல நடிகைக்கு பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரகுமான் !

ar rahman
தனது மனைவி இந்தி பேசியது தொடர்பாக பிரபல நடிகைக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

இந்திய சினிமாவில் மிகப்பெரிய இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். சமீபத்தில் சென்னையில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தனது மனைவி சாய்ரா பானுவுடன் அவர் பங்கேற்றார். அந்த மேடையில் முதலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பல சுவாரஸ்சியமான விஷயங்களை பேசினார். 

ar rahman

அப்போது ஏஆர் ரகுமானின் மனைவியை மேடைக்கு பேச வரும்படி அழைத்தனர். இதையடுத்து மேடைக்கு வந்த அவர் இந்தியில் பேச ஆரம்பித்தார். உடனடியான இடைமறித்த ஏஆர் ரகுமான், தமிழில் பேசும்படி அன்புக் கட்டளை இட்டார். இதை கேட்ட ரசிகர்கள் ஏஆர் ரகுமானின் செயலை பார்த்து பலத்த கோஷம் எழுப்ப ஆரம்பித்தனர். 

ar rahman

ஏ.ஆர்.ரகுமானின் இந்த செயலுக்கு ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வந்தனர். ஆனால் பிரபல நடிகையான கஸ்தூரி, தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்து பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன ? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க? என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் இந்த பதிவிற்கு கூலாக ஏ.ஆர்.ரகுமான் பதிலடி கொடுத்துள்ளார். அதில் காதலுக்கு மரியாதை என்று கூறி கஸ்தூரி கிண்டலான பதிவிற்கு பதிலடி கொடுத்தார். இந்த பதிவு ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது. 


 

Share this story