ஏ.ஆர். ரகுமானின் துணை பாடகி மோகினி டே கணவரை பிரிவிதாக அறிவிப்பு...

mohini dey

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது மனைவியை பிரிவதாக அறிவித்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் இந்த செய்தி பொய்யாக இருக்கக்கூடாதா என்று எண்ணி வருகின்றனர். இந்த நிலையில், ஏ.ஆர். ரகுமான் குழுவில் உள்ள துணை பாடகர் மோகினி டே தனது கணவரை பிரிவதாக அறிவித்து இருக்கிறார். மோகினி டே மற்றும் அவரது கணவர் இசையமைப்பாளர் மார்ஷ் ஹார்ட்சச் இருவரும் திருமண வாழ்வில் பிரிவதாக சமூக வலைதள பதிவின் மூலம் அறிவித்தனர். திருமண வாழ்வில் பிரிவதாக இருவரும் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். "கனத்த இதயத்துடன், மார்க் மற்றும் நானும் பிரிந்துவிட்டோம் என்று அறிவிக்கிறோம். முதலில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அர்ப்பணிப்பாக, இது எங்கள் இருவரிடையே பரஸ்பர புரிதல். நாங்கள் சிறந்த நண்பர்களாகவே இருக்கும் வேளையில், நாங்கள் இருவரும் வாழ்க்கையில் வெவ்வேறு விஷயங்களை விரும்புகிறோம் என்ற பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் பிரிந்து செல்வதுதான் சிறந்த வழி என்று நாங்கள் இருவரும் முடிவு செய்துள்ளோம்."

"MaMoGi மற்றும் Mohini Dey குழுக்கள் உட்பட பல திட்டங்களில் நாங்கள் இன்னும் இணைந்து செயல்படுவோம். நாங்கள் எப்போதும் ஒன்றாக வேலை செய்வதில் பெருமை கொள்கிறோம், அது எந்த நேரத்திலும் நிறுத்தப்படாது. நாங்கள் விரும்பும் பெரிய விஷயம், உலகில் உள்ள அனைவரிடமும் அன்பு இருக்க வேண்டும்." "எங்களுக்கு நீங்கள் வழங்கிய அனைத்து விதமான ஆதரவுக்கும் நன்றி. இந்த நேரத்தில் நல்ல விதமாக நாங்கள் எடுத்திருக்கும் முடிவை மதிக்கவும், எங்களுக்கு தனியுரிமையை வழங்கவும் கேட்டுக் கொள்கிறோம். இந்த விஷயத்தில் எந்த முடிவுகளையும் நாங்கள் விரும்பவில்லை," என்று மோகினி டே தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Share this story