மனைவி உடனான பிரிவு குறித்து ஏ.ஆர்.ரகுமான் உருக்கமான பதிவு...!

saira

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடனான திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக அவரது மனைவி சாய்ரா பானு நேற்று அறிவித்திருந்தது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருவருக்கும் 1995ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இதில் ஒரு மகளான கதீஜா ரஹ்மான் கடந்த ஆகஸ்டில் வெளியான ‘மின்மினி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். மகன் அமீன் பாடகராக வலம் வருகிறார். 

இந்த சூழலில் 29 வருடங்களுக்கு பிறகு ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு பிரிகின்றனர். இது குறித்து முதலில் அறிவித்த சாய்ரா பானு, “வாழ்வில் ஏற்பட்ட வேதனை மற்றும் வலிகள் காரணமாக பிரிவு முடிவை எடுத்துள்ளேன். ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்த போதிலும் தீர்க்க முடியாத இடைவெளி உருவானது. ஆழமான யோசனைக்குப் பிறகு பிரிவது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளோம்” கூறினார். 


இதனைத் தொடர்ந்து ஏ.ஆர் ரஹ்மான் இது குறித்து கூறுகையில்,  “நாங்கள் முப்பதாவது ஆண்டை அடைய வேண்டும் என்று நம்பினோம். ஆனால் எல்லா விஷயங்களும் நாம் நினைப்பது போன்று நடப்பதில்லை. உடைந்த இதயங்களின் பாரத்தில் கடவுளின் சிம்மாசனமும் நடுங்கலாம். இருந்தாலும், இந்த நிலையில், வாழ்க்கைக்கான சரியான அர்த்தத்தைத் தேட முடிவு செய்துள்ளோம். ஆனால், உடைந்த துண்டுகள் தங்கள் இடத்தை மீண்டும் பெற முடியாது என்பதே உண்மை. எங்கள் நண்பர்களுக்கு, அவர்கள் பகிரும் அன்புக்கும் நன்று. இந்த சூழலை நாங்கள் கடந்து செல்லும்போது, எங்கள் தனியுரிமையை மதிப்பதற்கும் நன்றி,” எனப் பதிவிட்டுள்ளார்.

Share this story