திடீரென்று நடிகரான பிரபல ம்யூசிக் டைரக்டர் -யார் எந்த படத்தில் தெரியுமா ?

ar rahman
தமிழில் 29 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மான், பிரபுதேவா மீண்டும் இணைந்திருக்கும் படம், ‘மூன் வாக்’. இசை, நடனம், பாடலுக்கு அதிக அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவான இப்படத்தை மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கியுள்ளார். இசை அமைத்து 5 பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் மூலம் அவர் நடிகராக அறிமுகமாகிறார். இதுகுறித்த போஸ்டர் நேற்று வெளியானது. பாபூட்டி என்ற நடனக்கலைஞர் வேடத்தில் பிரபுதேவா, அதிகமாக கோபப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற திரைப்பட இயக்குனராக ஏ.ஆர்.ரஹ்மான், துபாய் மேத்யு என்ற கேரக்டரில் யோகி பாபு, லார்ட் டிஜோகோவிக் என்ற வேடத்தில் அஜூ வர்கீஸ், லூனா என்ற ரோலில் அர்ஜூன் அசோகன், ஜாஸ்மின் என்பவராக சாட்ஸ் நடிக்கின்றனர். திடீரென்று ஏ.ஆர்.ரஹ்மான் நடிகராகி இருப்பதால், அவரது ரசிகர், ரசிகைகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Share this story