DNA ஃபர்ஸ்ட் சிங்கிள்-ஐ வெளியிடும் ஏ.ஆர். ரஹ்மான்
1731417331000
அதர்வா நடிப்பில் அடுத்து உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களுக்கு 5 திறமையான இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள். பலவிதமான எமோஷன்ஸ், எனர்ஜி மற்றும் ரசிக்கக் கூடிய பல தருணங்களை இத்திரைப்படம் கொண்டுள்ளது. இதை காட்சி அனுபவமாக ரசிகர்களுக்கு மேம்படுத்தி கொடுக்க இசையமைப்பாளர் ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையும் படத்தில் அமைந்துள்ளது என்பதை படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தற்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதால் படத்தின் திரையரங்கு வெளியீட்டு தேதியை படக்குழு விரைவில் வெளியிடும். க்ரைம் ஆக்ஷன் கதையாக உருவாகி இருக்கும் 'டிஎன்ஏ' திரைப்படத்தில் நம்பிக்கைக்குரிய நடிகர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர். படத்தின் முதல் பாடலான கண்ணே கனவே பாடல் வரும் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது என படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்பாடலை இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் அவரது எக்ஸ் பக்கத்தில் நாளை வெளியிடவுள்ளார்.
Two hearts, a melody, and a dream intertwined,
— Atharvaa (@Atharvaamurali) November 12, 2024
"Kanne Kanave" unveils emotions left undefined 💞🎼
Extremely happy to have Isai Puyal @arrahman sir release the First single on Nov 13th at 5 PM ☺️#DNAMovie #NimishaSajayan @nelsonvenkat @Olympiamovis @Ambethkumarmla pic.twitter.com/cyLHheLFXK