யுவன் சங்கர் ராஜாவுக்கு ‘கோல்டன் விசா’...... கௌரவப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம்.

photo

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.

photo

இந்திய சினிமா நட்சத்திரங் பலருக்கும்  தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கும் கோல்டன் விசா கொடுத்துள்ளது அதற்கான புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியாகி  டிரெண்டாகி வருகிறது.இதற்குமுன் நடிகை திரிஷா, அமலாபால், பாவனா இயக்குநர் பார்த்திபன், நடிகர் விஜய் சேதுபதி,கமல்ஹாசன் ஆகியேருக்கு ஐக்கிய அமீரக அரசு கோல்டன் விசா வழங்கி இருந்தது. இரண்டு தினங்களுக்கு முன் கூட நடிகர் சியான் விக்ரமிற்கு கோல்டன் விசா வழங்கியது குறிப்பிடத்தக்கது.


 


 அதாவது இந்தகோல்டன் விசாவை பயன்படுத்தி ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை நாம் துபாய்க்கு சென்று வரலாம். அங்கு தங்கி கல்வி கற்க, தொழில் தொடங்க ஏதுவாக இந்த விசாவை பயன்படுத்தலாம், குறிப்பாக அந்நாட்டின் குடியுரிமை போன்றது இந்த கோல்டன் விசா;மேலும், இந்த விசாவை தானாகவே புதுப்பித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story