உலகளவில் சாதனை படைத்த அரபிக்குத்து பாடல்

உலகளவில் சாதனை படைத்த அரபிக்குத்து பாடல்

அரபிக்குத்து பாடல் 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து உலகளவில் சாதனை படைத்துள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். பீஸ்ட் திரைப்படத்தில் அனிருத் இசையில், 'அரபிக் குத்து' மற்றும் 'ஜாலியோ ஜிம்கானா' பாடல்கள் ஹிட் அடித்தன. குறிப்பாக ‘அரபிக் குத்து’ பாடல் யூடியூபில் மாபெரும் ஹிட் அடித்தது. படம் வௌியாவதற்கு முன்பாகவே, அரபிக்குத்து பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், யூடியூபில் அரபிக்குத்து பாடல் 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து உலகளவில் சாதனை படைத்து வருகிறது. தற்போதுவரை, அரபிக்குத்து பாடலுக்கு ரசிகர்கள் வைப் செய்வது குறையவில்லை.

Share this story