சுந்தர் சி- ஆர்யா கூட்டணியின் 'அரண்மனை 3'... ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்!
'அரண்மனை 3’ திரைப்படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை, அரண்மனை 2 படங்கள் நல்ல வரவேற்பு பெற்றன. அதையடுத்து அவர் இயக்கத்தில் அரண்மனை 3 படமும் உருவானது. இந்தப் படத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்துள்ளார். ராஷி கன்னா, ஆண்ட்ரியா மற்றும் சாக்ஷி அகர்வால் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் விவேக், யோகிபாபு ஆகியோர் காமெடியில் கலக்கியுள்ளனர். இந்த படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.

படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல வசூல் பெற்றது. தற்போது அரண்மனை 3 படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது. Zee5 நிறுவனம் அரண்மனை 3 படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளனர்.
வரும் நவம்பர் 12-ம் தேதி அரண்மனை 3 திரைப்படம் Zee5 ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

