ஆள விடுங்கடா சாமி…. நான் அப்புறம் வரேன்…..- பொங்கல் ரேசிலிருந்து விலகிய ‘அரண்மனை4.

photo

பிரபல இயக்குநர் சுந்தர் சி-யின் ‘அரண்மனை4’ திரைப்படம் பொங்கல் ரோசிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

காமெடி கலந்த ஹாரர் படமாக  தயாராகிவரும் அரண்மனை சீரிஸ் வரிசையில் தற்போது ‘அரண்மனை4’ தயாராகியுள்ளது. இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இவர்களுடன் இணைந்து விடிவி கணேஷ், யோகிபாபு, சந்தோஷ் பிரதாப் ஆகியோர் நடித்துள்ளனர். படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கல் ரேசில் தனுஷின் கேப்டன் மில்லர், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ், சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்கள் உள்ளன. அதனால் படத்தின் வசூல் பாதிக்க வாய்ப்புள்ளதால் படத்தின் தேதி ஜனவரி 26க்கு மாற்ற செய்யப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது. தொடர்ந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே உறுதியான நிலவரம் தெரியவரும்.

Share this story