பொங்கலுக்கு வெளியாகும் அரண்மனை 4
1695989022781

அரண்மனை 4-ம் பாகம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் முதன் முதலாக வெளியான அரண்மனை திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இரண்டு மற்றும் மூன்றாம் பாகத்தை இயக்கி வெளியிட்டனர். சந்தானம், சூரி, ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, கோவை சரளா உள்ளிட்டோர் மூன்று பாகங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில், அரண்மனை 4-ம் பாகத்திற்கான அறிவிப்பு வௌியாகியுள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் 'அரண்மனை 4' திரைப்படம், 2024ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. முதல் தோற்றத்தையும் படக்குழு வௌியிட்டுள்ளது. படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசை அமைக்கிறார்.