சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ -அரசன் பட அப்டேட்

simbu thug life

வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் படம், ‘அரசன்’. தற்போது சென்னை தரமணியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சிம்பு, வெற்றிமாறன் ஆகியோரை இசை அமைப்பாளரும், பாடகருமான அனிருத் திடீரென்று சந்தித்து, படத்தின் பணிகள் குறித்து விவாதித்தார்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த மூவரின் கூட்டணி, ‘அரசன்’ படத்துக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ‘வடசென்னை’ யுனிவர்ஸுடன் தொடர்புடைய கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் சிம்பு, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

வட சென்னை யுனிவர்சுடன் தொடர்புடைய கதைக்களத்தில் உருவாகி வரும் அரசன் படம், ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் அடுத்தகட்ட அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு எவ்வித இடையூறும் இன்றி தொடர்ந்து வேகமாக நடந்து வருகிறது.

Share this story