ரிலீசுக்கு தயாரான அரவிந்தசாமியின் 'வணங்காமுடி'.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு !

vanangamudi

அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியுள்ள 'வணங்காமுடி' படம் விரைவில் வெளியாக உள்ளது. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் அரவிந்த் சாமி, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக கலக்கியதை விட தற்போது தனி திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த 2017ம் ஆண்டு அரவிந்தசாமி நடிப்பில் உருவான படம் ‘வணங்காமுடி’.

vanangamudi

செல்வா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அரவிந்தசாமி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக ரித்திகா சிங் மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகிய இருவர் நடித்துள்ளனர். இமான் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

vanangamudi

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த படம் சில சிக்கல்களால் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து விரைவில் இப்படம் வெளியிடப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story