‘தளபதி68’ பட அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் ‘அர்ச்சனா கல்பாத்தி’- உற்சாகத்தில் ரசிகர்கள்.

photo

‘தளபதி68’ படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்துவரும் நிலையில் ரசிகர்கள் கேட்காமலேயே செம அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.

photo

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாராகிவருகிறது நடிகர் விஜய்யின் 68வது படம். இந்த படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மோகன், பிரஷாந்த், வைபவ் என நட்சத்திர பட்டாளமே நடித்துவருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கிய நிலையில் தற்போது தாய்லாந்தில் நடந்துவருகிறது. இந்த நிலையில் படத்தயாரிப்பளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் அதாவது “ எங்கள் ஜீனியஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தளபதி 68 படத்தின் ஜாலியான படப்பிடிப்புகள் இன்னும் இருக்கிறது, நேற்று இரவு படத்தின் முக்கியமான காட்சி படமாக்கப்பட்டுள்ளதால் இன்று வெங்கட்பிரபுவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு  விடுமுறை” என பதிவிட்டுள்ளார் அர்ச்சனா.


இதனை பார்த்த ரசிகர்கள் கேட்காமலேயே படத்தின் அப்டேட்டை கொடுப்பதற்காக அர்ச்சனாவை புகழ்ந்து வருகின்றனர்.

Share this story