தனுஷ் பாணியை பின்பற்றுகிறீர்களா...? பிரதீப் ரங்கநாதன் பதில்

pradeep

தனுஷை பின்பற்றுகிறீர்களா என்ற கேள்விக்கு நடிகர் பிரதீப் ரங்கநாதன் பதிலளித்துள்ளார்.

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருக்கும் இப்படத்தில்  கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  கடந்த மாதம் 21ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில்  ரூ.100 கோடியை கடந்தது. pradeep

இந்த நிலையில் ஹைதரபாத்தில் இப்படத்தின் தெலுங்கு சக்சஸ் மீட் நடைபெற்றது. இதில் பிரதீப் ரங்கநாதன், அஷ்வத் மாரிமுத்து உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தனர். அப்போது பிரதீப் ரங்கநாதனிடம், நீங்கள் தனுஷை பின்பற்றுவது போல இருக்கிறதே என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நானும் அதை கேட்டு வருகிறேன். யாரையும் நான் பின்பற்ற முயற்சிக்கவில்லை. ஒருவேளை என் உடல் மற்றும் முக அமைப்பு அப்படி இருக்கலாம்” என்றார்.  மேலும் “நான் கண்ணாடியில் பார்க்கும்போது, ​​என்னைத் தான் பார்க்கிறேன். நான் நடித்த இரண்டு படங்களும் நன்றாக ஓடியிருக்கின்றன. நானும் நன்றாகத்தான் நடித்து வருகிறேன்” என்றார். 

Share this story