டிசம்பர் 11ம் தேதி ரிலீஸ் ஆகும் அரிக்கொம்பன் -யாரெல்லாம் நடித்துள்ளனர் தெரியுமா ?
எங்கேயும் எப்போதும்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘எங்க காட்டுல மழை’, ‘சிக்கிக்கு சிக்கிகுச்சு’, ‘காக்டெய்ல்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த மிதுன் மகேஸ்வரன், தற்போது மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் ‘அரிகொம்பன்’ திரைப்படத்தை இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசரை இயக்குனரும் நடிகருமான சசிகுமார் வெளியிட்டார். டிசம்பர் 11ம் தேதி
காட்டு யானையை மையமாகக் கொண்டு, அதே காட்டில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் எடுத்துரைக்கும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக கேரளத்தைச் சேர்ந்த தேவிகா கிருஷ்ணன் நடித்துள்ளார்.
‘திருடா திருடி’ படத்தின் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, மு. ராமசாமி, எதிர்நீச்சல் விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜய் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். டிசம்பர் 11ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது..

