உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள ‘அரியவன்’.. ஆக்ஷன் அதிரடியில் மிரட்டும் டிரெய்லர் !

ariyavan

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘அரியவன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

'யாரடி நீ மோகினி', ‘குட்டி’, 'திருச்சிற்றம்பலம்' ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் மித்ரன் ஜவஹர். அவரின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் 'அரியவன்'. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் கதையை மாரிச்செல்வன் எழுதியுள்ளார்.

ariyavan

அறிமுக நடிகர் ஈஷான் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரணாலி, டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஜி.பி. மீடியா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு கே.எஸ்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ariyavan

பெண்கள் மீதான  வன்முறைகளுக்கு எதிராக தனி ஒருவனாக போராடும் இளைஞனின் போராட்டம் இந்த படம். இந்த படம் வரும் மார்ச் 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Share this story