உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட “அரியவன்” திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு.

photo

மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘அரியவன்’ திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

photo

எம் ஜி பி மாஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிப்பில், புதுமுக நடிகர் இஷான், ஜீவா மற்றும் பாலிவுட் நடிகை பிரனாலி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘அரியவன்’.  இவர்களுடன் இணைந்து  சத்யன், டேனியல் பாலாஜி, சூப்பர் குட் சுப்ரமணி, கல்கி ராஜா, ரமா, ரவி வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  ஜேம்ஸ் வசந்தன், வேத் சங்கர், கிரி நந்த் என மூவர் இசையமைத்திருககும் இந்த படத்திற்கு சு.மாரி செல்வன் கதை அமைக்க  ஜகஜீவா வசனம் எழுதியிருக்கிறார்.

photo

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாராகியுள்ள இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற  நிலையில் டிரைலர் வெளியாகியுள்ளது. பரபரப்பு குறையாமல் வெளியாகியுள்ள இந்த டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரிக்க செய்துள்ளது.

Share this story