பிறந்தநாள் கொண்டாடும் அர்ஜூன் தாஸ்... திரைப்பிரபலங்கள் வாழ்த்து...

பிறந்தநாள் கொண்டாடும் அர்ஜூன் தாஸ்... திரைப்பிரபலங்கள் வாழ்த்து...

பிரபல நடிகர் அர்ஜூன் தாஸ், இன்று தனது பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அர்ஜூன் தாஸ். தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து இயக்கிய மாஸ்டர் திரைப்படத்திலும், விக்ரம் திரைப்படத்திலும் அர்ஜூன் தாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதனிடையே, அந்தகாரம் படத்தில் நாயகனாக அவர் நடித்திருந்தார். 

பிறந்தநாள் கொண்டாடும் அர்ஜூன் தாஸ்... திரைப்பிரபலங்கள் வாழ்த்து...

தொடர்ந்து, புட்ட பொம்மா, அநீதி படங்களிலும் அவர் கதாநாயகனாக நடித்துள்ளார். அநீதி படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, தற்போது விஷால் வெங்கட் இயக்கத்தில் அவர் புதிய திரைப்படம் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக, ஷிவாத்மிகா நடிக்கிறார்

இந்நிலையில், அர்ஜூன் தாஸ் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர் நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை பதிவிட்டு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Share this story