'பாம்' மிக ஸ்பெஷலான படம்.. ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டில் அர்ஜூன் தாஸ் பூரிப்பு!

Arjun das

விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் பாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ் சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர், காளி வெங்கட், அபிராமி, சிங்கம்புலி உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, சில நேரங்களில் சில மனிதர்கள் பட புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் இதற்கான விழா, இசை, நடன நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.

அப்போது இயக்குநர் விஷால் வெங்கட் பேசியதாவது: இதே கல்லூரியில் நானும் சுற்றிக் கொண்டிருந்தேன். இப்போது உங்கள் முன்னால் எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவது மகிழ்ச்சி. பாம் ஒரு சுவாரஸ்யமான படமாக இருக்கும், ஃபன் எண்டர்டெயின்மெண்டாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். அனைத்திற்கும் டெக்னிக்கல் குழுதான் காரணம், அவர்களுக்கு எனது நன்றி, இமான் சார் எனக்கு அண்ணன் போல் தான் இருந்தார், அவருக்கு எனது நன்றி.



அர்ஜுன் தாஸ் மற்றும் ஷ்வாத்மிகா உங்களுக்கும் நன்றி. ஜெம்ப்ரியோ நிறுவனத்திற்கு என் நன்றிகள். எங்கள் இளம் குழுவிற்கு ஆதரவைத் தரும் உங்கள் அனைவருக்கும் நன்றி எனக் கூறினார்.

இசையமைப்பாளர் இமான் பேசியதாவது: உங்கள் கனவுகள் நனவாக என் வாழ்த்துக்கள். பாம் ரொம்பவும் சுவாரஸ்யமான படம், ஜெம்ப்ரியோ நிறுவனத்தின் முதல் படத் தயாரிப்பில் நான் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடனே பிடித்தது, உடனே ஒப்புக்கொண்டேன். விஷால் இன்னும் நல்ல படங்கள் செய்வார், பெரிய இடத்திற்குச் செல்வார். அர்ஜுன் தாஸ் இன்னும் பல உயரம் தொட வாழ்த்துக்கள்.

ஷ்வாத்மிகா உங்கள் அப்பாவின் பெயரைக் காப்பாற்றி வருகிறீர்கள், வாழ்த்துக்கள். படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துகள். இயக்குநர் கதைக்கு மட்டுமல்லாமல், படத்தில் சின்ன சின்ன நுணுக்கங்களிலும் கவனம் கொண்டு அதற்கென மெனக்கெடல் போட்டுள்ளார். படம் மிக நல்ல படமாக வந்துள்ளது. மேஜிக்கல் எண்டர்டெயினராக இருக்கும். தயாரிப்பாளர் சுதாவிற்கு வாழ்த்துகள், அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் அர்ஜூன் தாஸ் பேசியதாவது: பாம் மிக ஸ்பெஷலான படம், கதை கேட்டவுடன் எனக்குப் பிடித்தது. இமான் சார் இப்படத்தில் ஒப்புக்கொண்டு இசையமைத்தது மகிழ்ச்சி. அவர் தான் நான் சரியாக இருப்பேன் என்று கூறியுள்ளார். ஷிவாத்மிகாவிற்கு வாழ்த்துக்கள் என அர்ஜூன் தாஸ் கூறினார்.

Share this story