அர்ஜூன் தாஸ் புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1725102026000
கடந்த 2022 ஆம் ஆண்டு அசோக் செல்வன், நாசர், மணிகண்டன், அஞ்சு குரியன், ரித்விகா மற்றும் பலர் நடித்து வெளியான திரைப்படம் சில நேரங்களில் சில மனிதர்கள். இப்படத்தை அறிமுக இயக்குனரான விஷால் வெங்கட் இயக்கினார். இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து இயக்குனர் விஷால் வெங்கட் அடுத்ததாக அர்ஜூன் தாஸ் நடிப்பில் படத்தை இயக்கி வருகிறார். படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளனர். படத்திற்கு பாம்ப் என பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் அர்ஜூன் தாஸுடன் காளி வெங்கட், ஷிவாத்மிகா, நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் இணைந்து ஜெம்பிரியோ பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். பாம்ப் திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ராஜ்குமார் பி.எம் ஒளிப்பதிவு மேற்கொள்ள , பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு செய்துள்ளார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது.