வசந்தபாலன் - அர்ஜூன் தாஸ் கூட்டணியில் ‘அநீதி’... ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Aneethi

வசந்தபாலன் - அர்ஜூன் தாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘அநீதி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெயில், அங்காடி தெரு உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அநீதி’. இந்த படத்தில் ‘கைதி’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் மற்றும் வசந்தபாலனின் அர்பன் பாய்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். 

Aneethi

 இந்த படத்தில் அர்ஜூன் தாஸுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவர்களுடன் வனிதா விஜயகுமார், நடிகர் அர்ஜுன் சிதம்பரம், சுரேஷ்சக்ரவர்த்தி, அறந்தாங்கி நிஷா, காளி வெங்கட், டி.சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

Aneethi

த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் வரும் ஜூலை 21-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story