எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘அநீதி’.. ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு !

aneethi

அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அநீதி’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. 

வித்தியாசமான படைப்புகள் மூலம் ரசிகர்களை கவர்ந்த வசந்தபாலன், அடுத்து ‘அநீதி’ என்ற மாறுப்பட்ட படத்தை உருவாக்கியுள்ளார். பொதுவாக அவரது திரைப்படங்கள் கீழ்நிலை தொழிலாளிகள் குறித்துதான் இருக்கும். அப்படி உருவாகியிருக்கும் திரைப்படம் இந்த படம்.

aneethi

இந்த படத்தில் அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.  இவர்களுடன் அர்ஜூன் சிதம்பரம், வனிதா விஜயகுமார், சுரேஷ்சக்ரவர்த்தி, அறந்தாங்கி நிஷா, காளி வெங்கட், டி.சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் மற்றும் வசந்தபாலனின் அர்பன் பாய்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை 21-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

aneethi

இந்த படம் உணவு டெலிபாய் இன்னல்கள் குறித்த படம். உணவு டெலிவரியின் போது அவர்கள் படும் வலியும், வேதனையும் இந்த படத்தில் ஆழமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உணவு டெலிவரி ஊழியர்களின் போராட்டம், நிச்சயமற்ற வேலை, வாடிக்கையாளர்கள் அவர்களை நடத்தும் விதம் ஆகியவை குறித்து காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில் நாளை மறுநாள் வெளியாகவுள்ள இப்படத்தின் ஸ்னீக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. அதில் உணவு டெலிவரி பாயாக இருக்கும் அர்ஜூன் தாஸ், சைக்கோ கொலைகாரனாக மாறும் காட்சிகள் உள்ளது. இந்த காட்சி வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Share this story