நீதியின் குரலாய் ஒலிக்கிறது ‘அநீதி’... வசந்தபாலன் படத்தின் டீசர் வெளியீடு !
வசந்தபாலன் மற்றும் அர்ஜூன் தாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘அநீதி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அநீதி’. கைதி, மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்த அர்ஜூன் தாஸ், இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.
இவர்களுடன் வனிதா விஜயகுமார், நடிகர் அர்ஜுன் சிதம்பரம், சுரேஷ்சக்ரவர்த்தி, அறந்தாங்கி நிஷா, காளி வெங்கட், டி.சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை 21-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் மற்றும் வசந்தபாலனின் அர்பன் பாய்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. நீதி கிடைக்காதவர்களின் குரலாக இப்படம் ஒலிக்கிறது. எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இப்படம் உருவாகியுள்ளது.