அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் புது படம் -என்ன டைட்டில் தெரியுமா ?
அர்கா மீடியாஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்ட - பிரசாத் தேவினேனி ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் ‘ஜான் டோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் மதுமிதா மற்றும் கதாசிரியர் நிக்கோலஸ் செவாலியர் ஆகியோர் இணைந்து கதை, திரைக்கதை எழுதி இருக்கும் ‘ஜான் டோ’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைத்திருக்கிறார். கூடுதல் இசையை ஆர்டிஸ்ட் 404 எனும் இசைக்குழு அமைத்திருக்கிறது. படத்தொகுப்பு பணிகளை விஜய் வெங்கடரமணன் மேற்கொள்ள தயாரிப்பு வடிவமைப்பாளராக அஷ்வினி காலே பணியாற்றுகிறார்.

