‘மறக்குமா நெஞ்சம்’- இசை நிகழ்ச்சியின் புது தேதியை அறிவித்த ‘ஏ.ஆர். ரஹ்மான்’.

photo

இசை புயல் ஏ.ஆர். ரஹ்மானின் நேரடி நிகழ்ச்சி சென்னையில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நடக்க இருந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது மாற்று தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

photo

பிசியான இசையமைப்பாளராகவும், இந்தியாவின் பிரபல இசையமைப்பாளராகவும் வலம்வரும் ஏ.ஆர். ரகுமான். தமிழ் இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் இசையமைத்து ஆஸ்கர் உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார். தற்போது பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் எக்கசக்கமான இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் சென்னையில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நேரடி இசை நிகழ்ச்சி  ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் ஈசிஆர் சாலையில் உள்ள ஆதித்யராம் பேலஸ் சிட்டியில் நடப்பதாக இருந்த நிலையில் மழை காரணமாக நிகழ்ச்சி தடைபட்டது. இதனால் ஆவலாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள் வந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். தொடர்ந்து தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.


 

இந்த நிலையில் கான்சர்ட்டின் புது தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, அதாவது வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி மழையால் தடைப்பட்ட ஏ.ஆர். ரஹ்மானின் நிகழ்ச்சி அதே இடத்தில் நடக்கும் என்றும், முன்பு பெற்ற அதே டிக்கெட்டை பயன்படுத்தலாம் எனவும் இசைபுயல் அறிவிப்பு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.   

Share this story