ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி... டிக்கெட்டை பதிவேற்ற இன்று கடைசி தேதி...

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி... டிக்கெட்டை பதிவேற்ற இன்றே கடைசி தேதி...

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி கடந்த 10ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பொதுமக்கள் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தங்களது வாகனங்களில் வந்தனர். இதனால் ஓ.எம்.ஆர், பனையூர், ஈசி.ஆர் ஆகிய சாலைகளில் சுமார் 3 மணி நேரங்களாக கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கானாத்தூர் போலீஸார் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி தொடர்பாக சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வரும் ஏசிடிசி நிறுவனம் மீது நம்பிக்கை மோசடி மற்றும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல் ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு  செய்தனர். 

இந்நிலையில், இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட்டை பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாள் என ஏசிடிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை 7 ஆயிரம் பேர் டிக்கெட்டை ஸ்கேன் செய்து அனுப்பியுள்ளனர்.

Share this story